நமது தளத்தில் பல்வேறு சமையல் செய்முறைகள் பற்றி பதிவிட்டு வருகிறோம் அதன் தொடர்ச்சியாக, இந்த பதிவில் சுவையான ஸ்ட்ராபெர்ரி மஃபின் ரெசிப்பி செய்வது எப்படி என்று பார்க்கப் போகிறோம். இதனை முயற்சி செய்து உங்களின் பிரியாமானவர்களுக்கு அளித்து மகிழுங்கள்…
மாலை வேளையில் உங்கள் குழந்தைகள் திடீரென்று கேக் கேட்கிறார்களா? உங்கள் வீட்டில் மைக்ரோஓவன் உள்ளதா? அப்படியானால் ஒரு அட்டகாசமான மற்றும் எளிமையான மஃபின் என்னும் கப் கேக்கை வீட்டிலேயே தயாரிக்கலாம். நீங்கள் மார்கெட்டில் ஸ்ட்ராபெர்ரி பழங்களை அதிகம் பார்க்கிறீர்களா? உங்கள் குழந்தைகளுக்கு ஸ்ட்ராபெர்ரி பழங்கள் என்றால் ரொம்ப பிடிக்குமா? அப்படியானால் அந்த ஸ்ட்ராபெர்ரி பழங்களைக் கொண்டு செய்யப்படும் மஃபினை எப்படி செய்வதென்று கீழே படித்து தெரிந்து கொள்ளுங்கள். முக்கியமாக இந்த ரெசிபி செய்வது மிகவும் எளிமையானது.
இப்போது ஸ்ட்ராபெர்ரி மஃபின் ரெசிபி எப்படி செய்வதென்று தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள். அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* மைதா – 2 கப் (240 கிராம்)
* சர்க்கரை – 1 கப் (200 கிராம்)
* உப்பில்லாத வெண்ணெய் – 1/2 கப் (120 கிராம்)
* வென்னிலா எசன்ஸ் – 1 டீஸ்பூன்
* பெரிய முட்டை – 2
* பேக்கிங் பவுடர் – 2 டீஸ்பூன்
* உப்பு – 1/4 டீஸ்பூன்
* பால் – 1/2 கப் (120 மிலி)
* ஸ்ட்ராபெர்ரி பழங்கள் – 1 கப் (நறுக்கியது)
செய்முறை:
* முதலில் மைக்ரோஓவனை 190 டிகிரி C-ல் சூடேற்றிக் கொள்ள வேண்டும்.
* பின் ஒரு மஃபின் ட்ரேயில் கப் கேக் லைனரை அடுக்கி வைக்க வேண்டும்.
* பின்பு ஒரு அகலமான பௌலில் வெண்ணெய், சர்க்கரை, வென்னிலா எசன்ஸ் போட்டு எலக்ட்ரிக் பீட்டர் கொண்டு நன்கு க்ரீமியாக வரும் வரை அடித்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு அதில் ஒரு முட்டையை உடைத்து ஊற்றி, அதையும் நன்கு அடித்துக் கொள்ளவும்.
* பின்னர் அதில் மைதா, பேக்கிங் பவுடர், உப்பு சேர்த்து பீட்டர் கொண்டு கலந்து கொள்ள வேண்டும்.
* அடுத்து, அதில் சிறிது பால் சேர்த்து பீட்டரால் நன்கு க்ரீமி போன்று அடித்துக் கொள்ளவும்.
* பின் அதில் ஸ்ட்ராபெர்ரி பழங்களை சிறிது சேர்த்து மெதுவாக பிரட்டி விடவும்.
* பின்பு ஒரு ஐஸ்க்ரீம் ஸ்கூப் பயன்படுத்தி, கலவையை கப் கேக் லைனரில் வைத்து, அவற்றின் மேல் நறுக்கிய ஸ்ட்ராபெர்ரிகளை வைத்து, ஓவனில் வைத்து, 30 நிமிடம் பேக் செய்து இறக்கினால், சுவையான ஸ்ட்ராபெர்ரி மஃபின் தயார்.
இந்த பதிவின் மூலமாக ஸ்ட்ராபெர்ரி மஃபின் எப்படி செய்வது என்பதை பற்றி தெரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நீங்களும் இதை பின்பற்றி ஸ்ட்ராபெர்ரி மஃபின் ரெசிப்பி செய்து எப்படி இருந்தது என்று கமென்ட் செய்யுங்கள் அல்லது உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தாலும் கமென்ட் செய்யுங்கள் பதிலளிக்கிறோம். உங்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தால் உங்களுடைய நண்பர்களுக்கு பகிருங்கள். .