அசைவம்

Crispy Chicken Popcorn Recipe In Tamil | மொறுமொறுப்பான… சிக்கன் பாப்கார்ன்

நமது தளத்தில் பல்வேறு சமையல் செய்முறைகள் பற்றி பதிவிட்டு வருகிறோம் அதன் தொடர்ச்சியாக, இந்த பதிவில் சுவையான மொறுமொறுப்பான… சிக்கன் பாப்கார்ன் ரெசிப்பி செய்வது எப்படி என்று பார்க்கப் போகிறோம். இதனை முயற்சி செய்து உங்களின் பிரியாமானவர்களுக்கு அளித்து மகிழுங்கள்…

சிக்கன் பலரது விருப்பமான அசைவ உணவாகும். சிக்கனை வைத்து பல்வேறு வித்தியாசமான மற்றும் சுவையான ரெசிபிக்களை கடைகளில் சுவைத்திருப்போம். அப்படி கடைகளில் விற்கப்படும் ரெசிபிக்களை வீட்டிலும் செய்ய முயற்சிப்போம்.

தேவையான பொருட்கள்:

* எலும்பில்லாத சிக்கன் – 250 கிராம்

* பூண்டு விழுது – 2 டீஸ்பூன்

* எலுமிச்சை சாறு – 1 டேபிள் ஸ்பூன்

* உப்பு – சுவைக்கேற்ப

* சீரகப் பொடி – 1 டீஸ்பூன்

* கரம் மசாலா – 1 டீஸ்பூன்

* பிரட் – 4

* முட்டை – 1

* பால் – 1 டேபிள் ஸ்பூன்

* மைதா – 1/2 கப்

செய்முறை:

* முதலில் சிக்கனை சிறு துண்டுகளாக வெட்டி, நீரில் நன்கு கழுவிக் கொள்ள வேண்டும்.

* பின் கழுவிய சிக்கனை ஒரு பெளலில் போட்டு, அத்துடன் பூண்டு விழுது, எலுமிச்சை சாறு மற்றும் உப்பு சேர்த்து பிரட்டி 20 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.

* பின்பு பிரட் துண்டுகளை நன்கு பொன்னிறமாக டோஸ்ட் செய்து, மிக்சர் ஜாரில் போட்டு பொடி செய்து, ஒரு தட்டில் போட்டுக் கொள்ள வேண்டும். அதன் பின் பிரட் தூளுடன் சீரகப் பொடி மற்றும் கரம் மசாலா சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.

* பிறகு ஒரு பௌலில் முட்டையை உடைத்து ஊற்றி, அதனுடன் பாலை சேர்த்து நன்கு அடித்துக் கொள்ள வேண்டும். பின் ஒரு தட்டில் மைதாவை போட்டுக் கொள்ள வேண்டும்.

* இப்போது ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடேற்றிக் கொள்ளவும்.

* பின்னர் ஒரு சிக்கன் துண்டை எடுத்து, முதலில் முட்டை கலவையில் பிரட்டி, பின் மைதாவில் பிரட்டி, அதன் பின் மீண்டும் முட்டையில் பிரட்டி, இறுதியாக பிரட் தூளில் பிரட்டி எண்ணெயில் போட வேண்டும். இப்படி அனைத்து சிக்கனையும் பொன்னிறமாக பொரித்து எடுத்தால், மொறுமொறுப்பான சிக்கன் பாப்கார்ன் தயார்.

இந்த பதிவின் மூலமாக மொறுமொறுப்பான… சிக்கன் பாப்கார்ன் எப்படி செய்வது என்பதை பற்றி தெரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நீங்களும் இதை பின்பற்றி மொறுமொறுப்பான… சிக்கன் பாப்கார்ன் ரெசிப்பி செய்து எப்படி இருந்தது என்று கமென்ட் செய்யுங்கள் அல்லது உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தாலும் கமென்ட் செய்யுங்கள் பதிலளிக்கிறோம். உங்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தால் உங்களுடைய நண்பர்களுக்கு பகிருங்கள். .

About the author

admin

Leave a Comment