சைவம்

Aadi Perukku Special: Aadi Thengai Paal Recipe In Tamil | ஆடி தேங்காய் பால்

நமது தளத்தில் பல்வேறு சமையல் செய்முறைகள் பற்றி பதிவிட்டு வருகிறோம் அதன் தொடர்ச்சியாக, இந்த பதிவில் சுவையான ஆடி தேங்காய் பால் ரெசிப்பி செய்வது எப்படி என்று பார்க்கப் போகிறோம். இதனை முயற்சி செய்து உங்களின் பிரியாமானவர்களுக்கு அளித்து மகிழுங்கள்…

ஆடி மாதம் மிகவும் சிறப்பு வாய்ந்த மாதம். குறிப்பாக ஆடி மாதத்தில் வரும் ஆடிப்பெருக்கு அல்லது ஆடி 18 மிகவும் சிறப்பான நாள். இந்நாளில் மக்கள் பல்வேறு சுவையான உணவுகளை சமைத்து அம்மனுக்கு படைப்பார்கள். அதில் ஒன்று தான் ஆடி பால் என்னும் ஆடி தேங்காய் பால். நீங்கள் வரவிருக்கும் ஆடி பெருக்கு அன்று ஆடி பால் செய்ய நினைக்கிறீர்களா? ஆனால் அதை எப்படி செய்வதென்று தெரியாதா? அப்படியானால் இக்கட்டுரை உங்களுக்கானது.

ஏனெனில் கீழே ஆடி தேங்காய் பால் எப்படி செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* துருவிய தேங்காய் – 1 கப்

* வெதுவெதுப்பான நீர் – 2 கப்

* வெல்லம் – 1/2 கப்

* நெய் – 3 டீஸ்பூன்

* ஏலக்காய் பொடி – 1/4 டீஸ்பூன்

* முந்திரி – சிறிது

செய்முறை:

* முதலில் மிக்சர் ஜாரில் தேங்காயை போட்டு, ஒரு கப் வெதுவெதுப்பான நீர் சேர்த்து நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

* பின் அதை வடிகட்டி பயன்படுத்தி, தேங்காய் பாலை வடிகட்டிக் கொள்ள வேண்டும். இப்போது ஒரு கப் கெட்டியான தேங்காய் பால் கிடைக்கும். இதை ஒன்றாம் பால் என்று கூறுவோம்.

* பின்னர் வடிகட்டியில் உள்ள அரைத்த தேங்காயை மீண்டும் மிக்சர் ஜாரில் போட்டு, அதில் மீதமுள்ள ஒரு கப் வெதுவெதுப்பான நீரை ஊற்றி நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

* பின் அதையும் வடிகட்டியில் வடிகட்டி, ஒரு கப் தேங்காய் பால் எடுத்துக் கொள்ள வேண்டும். இதை இரண்டாம் பால் என்று கூறுவோம்.

* பிறகு ஒரு பாத்திரத்தில் வெல்லத்தைப் போட்டு, அதில் 1/4 கப் நீரை ஊற்றி அடுப்பில் வைத்து, வெல்லத்தை உருக வைக்க வேண்டும்.

* வெல்லம் நன்கு உருகியதும், அதை இறக்கி, வடிகட்டி பயன்படுத்தி வெல்லப்பாகுவை வடிகட்டிக் கொள்ள வேண்டும்.

* பின்பு அந்த வடிகட்டி வெல்லப்பாகு பாத்திரத்தில் ஊற்றி, அடுப்பில் வைத்து, அதில் இரண்டாம் தேங்காய் பாலை ஊற்றி 3 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும்.

* பின் அதில் ஒன்றாம் தேங்காய் பாலை ஊற்றி அடுப்பை அணைத்து பாத்திரத்தை இறக்கிவிட வேண்டும்.

* அடுத்து அதில் ஏலக்காய் பொடி சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.

* இறுதியாக ஒரு சிறிது வாணலியில் நெய் ஊற்றி சூடானதும் முந்திரியைப் போட்டு பொன்னிறமாக வறுத்து அதில் ஊற்றி கிளறினால், சுவையான ஆடி பால் அல்லது ஆடி தேங்காய் பால் தயார்.

Image Courtesy: jeyashriskitchen

இந்த பதிவின் மூலமாக ஆடி தேங்காய் பால் எப்படி செய்வது என்பதை பற்றி தெரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நீங்களும் இதை பின்பற்றி ஆடி தேங்காய் பால் ரெசிப்பி செய்து எப்படி இருந்தது என்று கமென்ட் செய்யுங்கள் அல்லது உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தாலும் கமென்ட் செய்யுங்கள் பதிலளிக்கிறோம். உங்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தால் உங்களுடைய நண்பர்களுக்கு பகிருங்கள். .

About the author

admin

Leave a Comment