நமது தளத்தில் பல்வேறு சமையல் செய்முறைகள் பற்றி பதிவிட்டு வருகிறோம் அதன் தொடர்ச்சியாக, இந்த பதிவில் சுவையான மட்டன் சில்லி ரோஸ்ட் ரெசிப்பி செய்வது எப்படி என்று பார்க்கப் போகிறோம். இதனை முயற்சி செய்து உங்களின் பிரியாமானவர்களுக்கு அளித்து மகிழுங்கள்…
இந்த வார இறுதியில் ஒரு அட்டகாசமான சுவையைக் கொண்ட மட்டன் ரெசிபி செய்ய நினைக்கிறீர்களா? இதுவரை நீங்கள் வீட்டில் செய்யாத ஒரு புதிய ரெசிபியை செய்ய விரும்புகிறீர்களா? அப்படியானால் மட்டன் சில்லி ரோஸ்ட் சரியாக இருக்கும். இதுவரை நீங்கள் சிக்கன் சில்லி தான் கேட்டிருப்பீர்கள் மற்றும் சுவைத்திருப்பீர்கள். ஆனால் மட்டன் சில்லி ரோஸ்ட் வித்தியாசமாக இருப்பதோடு, மிகவும் ருசியாகவும் இருக்கும். அதோடு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையிலும் இருக்கும்.
தேவையான பொருட்கள்:
* எலும்பில்லாத மட்டன் – 1/2 கிலோ
* உப்பு – சுவைக்கேற்ப
* இஞ்சி பூண்டு விழுது – 1 டேபிள் ஸ்பூன்
* எலுமிச்சை சாறு – 1 டேபிள் ஸ்பூன்
மசாலாவிற்கு…
* தேங்காய் எண்ணெய் – 4 டேபிள் ஸ்பூன்
* பட்டை – 1 துண்டு
* சோம்பு – 2 டீஸ்பூன்
* கறிவேப்பிலை – சிறிது
* வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)
* பூண்டு – 6 பல்
* தக்காளி – 2 (பொடியாக நறுக்கியது)
* காஷ்மீரி மிளகாய் தூள் – 1 டேபிள் ஸ்பூன்
* மல்லித் தூள் – 1 டேபிள் ஸ்பூன்
* சீரகப் பொடி – 2 டீஸ்பூன்
* கரம் மசாலா – 2 டீஸ்பூன்
* உப்பு – சுவைக்கேற்ப
* மிளகுத் தூள் – 2 டீஸ்பூன்
* கொத்தமல்லி – சிறிது
அரைப்பதற்கு…
* பூண்டு – 5 பல்
* வரமிளகாய் – 5
செய்முறை:
* முதலில் மட்டனை நீரில் நன்கு கழுவிக் கொள்ள வேண்டும்.
* பின் கழுவிய மட்டனை ஒரு குக்கரில் போட்டு, அத்துடன் உப்பு, இஞ்சி பூண்டு விழுது, எலுமிச்சை சாறு சேர்த்து கிளறி, அடுப்பில் வைத்து, குக்கரை மூடி 6-7 விசில் விட்டு இறக்கி, விசில் போனதும் குக்கரைத் திறந்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் மிக்சர் ஜாரில் பச்சை மிளகாய் மற்றும் பூண்டு சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், பட்டை, சோம்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் வெங்காயம், பூண்டு சேர்த்து நன்கு பொன்னிறமாக வதக்கி, தக்காளி, அரைத்த பச்சை மிளகாய் பூண்டு விழுதை சேர்த்து வதக்க வேண்டும்.
* தக்காளி நன்கு மென்மையாக வதங்கியதும், அதில் காஷ்மீரி மிளகாய் தூள், கரம் மசாலா, சீரகப் பொடி மற்றும் மல்லித் தூள் ஆகியவற்றை சேர்த்து கிளறி, எண்ணெய் பிரியும் வரை நன்கு வதக்க வேண்டும்.
* பிறகு அதில் வேக வைத்துள்ள மட்டனை, அதில் உள்ள நீருடன் சேர்த்து கிளறி, நீர் முற்றிலும் வற்றியதும், அதில் மிளகுத் தூள் மற்றும் கொத்தமல்லியைத் தூவி கிளறி இறக்கினால், சுவையான மட்டன் சில்லி ரோஸ்ட் தயார்.
இந்த பதிவின் மூலமாக மட்டன் சில்லி ரோஸ்ட் எப்படி செய்வது என்பதை பற்றி தெரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நீங்களும் இதை பின்பற்றி மட்டன் சில்லி ரோஸ்ட் ரெசிப்பி செய்து எப்படி இருந்தது என்று கமென்ட் செய்யுங்கள் அல்லது உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தாலும் கமென்ட் செய்யுங்கள் பதிலளிக்கிறோம். உங்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தால் உங்களுடைய நண்பர்களுக்கு பகிருங்கள். .