நமது தளத்தில் பல்வேறு சமையல் செய்முறைகள் பற்றி பதிவிட்டு வருகிறோம் அதன் தொடர்ச்சியாக, இந்த பதிவில் சுவையான சாக்லேட் இட்லி கேக் ரெசிப்பி செய்வது எப்படி என்று பார்க்கப் போகிறோம். இதனை முயற்சி செய்து உங்களின் பிரியாமானவர்களுக்கு அளித்து மகிழுங்கள்…
மாலை வேளையில் உங்கள் குழந்தைகளுக்கு ஒரு சுவையான மற்றும் எளிமையான ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க ஆசைப்படுகிறீர்களா? என்ன செய்து கொடுப்பது என்று யோசிக்கிறீர்களா? அப்படியானால் அவர்களுக்கு ஒரு சூப்பரான சாக்லேட் இட்லி கேக் செய்து கொடுங்கள். இந்த இட்லி கேக் சாப்பிட அப்படியே கேக் போன்ற சுவையுடன் இருக்கும். மேலும் குழந்தைகள் விரும்பி சாப்பிடுமாறு இருக்கும். முக்கியமாக பெரியோர்களும் விரும்பி சாப்பிட ஏற்ற ரெசிபியும் கூட.
தேவையான பொருட்கள்:
* மைதா – 1/4 கப்
* ரவை – 1/4 கப்
* கொக்கோ பவுடர் – 2 டேபிள் ஸ்பூன்
* எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
* தயிர் – 1/2 கப்
* சர்க்கரை – 3-4 டேபிள் ஸ்பூன்
* தண்ணீர் அல்லது பால் – 1/4 கப்
* பேக்கிங் சோடா – 1/4 டீஸ்பூன்
* வென்னிலா எசன்ஸ் – 1 டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் இட்லி தட்டில் எண்ணெயைத் தடவிக் கொள்ள வேண்டும்.
* பின் ஒரு பௌலில் தயிர், சர்க்கரையை ஒன்றாக எடுத்து, சர்க்கரை கரைந்து நன்கு க்ரீம் போல் ஆகும் வரை நன்கு கிளறி விட வேண்டும்.
* பின்பு அதில் எண்ணெய் மற்றும் வென்னிலா எசன்ஸ் சேர்த்து கிளறி விட வேண்டும்.
* பிறகு அதில் ரவையை சேர்த்து நன்கு கிளறி, பின் கொக்கோ பவுடரை சேர்த்து கிளறி விட வேண்டும்.
* பின்னர் நீர்/பால் ஊற்றி கிளறி 5 நிமிடம் ஊற வைக்க வேண்டும். பின், அதில் பேக்கிங் சோடா மற்றும் மைதாவை சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
* இறுதியாக அந்த கலவையை எண்ணெய் தடவிய இட்லி தட்டில் ஊற்றி, இட்லி பாத்திரத்தில் வைத்து வேக வைத்து எடுத்தால், சுவையான சாக்லேட் இட்லி கேக் தயார்.
இந்த பதிவின் மூலமாக சாக்லேட் இட்லி கேக் எப்படி செய்வது என்பதை பற்றி தெரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நீங்களும் இதை பின்பற்றி சாக்லேட் இட்லி கேக் ரெசிப்பி செய்து எப்படி இருந்தது என்று கமென்ட் செய்யுங்கள் அல்லது உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தாலும் கமென்ட் செய்யுங்கள் பதிலளிக்கிறோம். உங்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தால் உங்களுடைய நண்பர்களுக்கு பகிருங்கள். .