சைவம்

Vallarai Keerai Sambar Recipe In Tamil | சத்தான… வல்லாரை கீரை சாம்பார்

நமது தளத்தில் பல்வேறு சமையல் செய்முறைகள் பற்றி பதிவிட்டு வருகிறோம் அதன் தொடர்ச்சியாக, இந்த பதிவில் சுவையான சத்தான… வல்லாரை கீரை சாம்பார் ரெசிப்பி செய்வது எப்படி என்று பார்க்கப் போகிறோம். இதனை முயற்சி செய்து உங்களின் பிரியாமானவர்களுக்கு அளித்து மகிழுங்கள்…

கீரைகளில் வல்லாரை கீரை மிகவும் ஆரோக்கியமான ஒன்று. இது நினைவாற்றலை அதிகரிக்கும் பண்புகளை அதிகம் கொண்டுள்ளன. பொதுவாக வல்லாரை கீரையைக் கொண்டு துவையல் தான் செய்வார்கள். ஆனால் இதைக் கொண்டு சாம்பார் கூட செய்யலாம். இந்த கீரை சாம்பார் சாதத்துடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும். எப்போதும் காய்கறியைப் போட்டு சாம்பார் செய்து அழுத்திருந்தால், இந்த கீரை கொண்டு சாம்பார் செய்யுங்கள். மேலும் குழந்தைகள் இருக்கும் வீட்டில் இம்மாதிரியான கீரை சாம்பார் அடிக்கடி செய்வது, குழந்தைகளுக்கு நல்லது.

சரி,

தேவையான பொருட்கள்:

* சின்ன வெங்காயம் – 10 (தோலுரித்து நறுக்கியது)

* பூண்டு – 6 பல்

* வல்லாரை கீரை – 3 கப் (நறுக்கியது)

* தண்ணீர் – தேவையான அளவு

* புளி – 1 சிறிய எலுமிச்சை அளவு

* மல்லித் தூள் – 2 டேபிள் ஸ்பூன்

* மிளகாய் தூள் – 2 டீஸ்பூன்

* உப்பு – சுவைக்கேற்ப

* சர்க்கரை – 1 டீஸ்பூன்

பருப்பு செய்வதற்கு…

* துவரம் பருப்பு – 1/2 கப்

* மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்

* சீரகம் – 1 டீஸ்பூன்

தாளிப்பதற்கு…

* எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்

* கடுகு – 1 டீஸ்பூன்

* சீரகம் – 1 டீஸ்பூன்

* உளுத்தம் பருப்பு – 1 டீஸ்பூன்

* பெருங்காயத் தூள் – 1/4 டீஸ்பூன்

* வரமிளகாய் – 1

செய்முறை:

* முதலில் குக்கரில் துவரம் பருப்பை கழுவிப் போட்டு, அத்துடன் மஞ்சள் தூள் மற்றும் சீரகம் சேர்த்து, நீரை ஊற்றி குக்கரை மூடி அடுப்பில் வைத்து, 2-3 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும்.

* பின் புளியை நீரில் ஊற வைத்து, பிசைந்து சாறு எடுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்கள் ஒவ்வொன்றாக சேர்த்து தாளிக்க வேண்டும்.

* பின் அதில் வெங்காயம், பூண்டு சேர்த்து, சிறிது உப்பு தூவி ஒரு நிமிடம் நன்கு வதக்க வேண்டும்.

* பின்பு அதில் கீரையை சேர்த்து வதக்கி, நீரை ஊற்றி கொதிக்க விட வேண்டும்.

* பிறகு அதில் மல்லித் தூள், மிளகாய் தூள், புளிச்சாறு சேர்த்து நன்கு கொதிக்க விட வேண்டும்.

* அடுத்து, அதில் வேக வைத்துள்ள பருப்பை சேர்த்து கிளறி, சுவைக்கேற்ப உப்பு மற்றும் சர்க்கரை சேர்த்து கிளறி, 5-8 நிமிடம் குறைவான தீயில் கொதிக்க வைத்து இறக்கினால், சுவையான வல்லாரை கீரை சாம்பார் தயார்.

இந்த பதிவின் மூலமாக சத்தான… வல்லாரை கீரை சாம்பார் எப்படி செய்வது என்பதை பற்றி தெரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நீங்களும் இதை பின்பற்றி சத்தான… வல்லாரை கீரை சாம்பார் ரெசிப்பி செய்து எப்படி இருந்தது என்று கமென்ட் செய்யுங்கள் அல்லது உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தாலும் கமென்ட் செய்யுங்கள் பதிலளிக்கிறோம். உங்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தால் உங்களுடைய நண்பர்களுக்கு பகிருங்கள். .

About the author

admin

Leave a Comment