சைவம்

Chilli Cheese Bajji Recipe In Tamil | சில்லி சீஸ் பஜ்ஜி

நமது தளத்தில் பல்வேறு சமையல் செய்முறைகள் பற்றி பதிவிட்டு வருகிறோம் அதன் தொடர்ச்சியாக, இந்த பதிவில் சுவையான சில்லி சீஸ் பஜ்ஜி ரெசிப்பி செய்வது எப்படி என்று பார்க்கப் போகிறோம். இதனை முயற்சி செய்து உங்களின் பிரியாமானவர்களுக்கு அளித்து மகிழுங்கள்…

மாலை வேளையில் அதுவும் மழை பெய்யும் போது, காரமாகவும், மொறுமொறுப்பாகவும், சூடாகவும் சாப்பிட தோன்றும். அதுவும் பஜ்ஜி சாப்பிட்டால் அட்டகாசமாக இருக்கும்.

தேவையான பொருட்கள்:

* கடலை மாவு – 1 கப்

* அரிசி மாவு – 1/4 கப்

* இஞ்சி பூண்டு விழுது – 1 டேபிள் ஸ்பூன்

* மிளகாய் தூள் – 1 டேபிள் ஸ்பூன்

* உப்பு – சுவைக்கேற்ப

* பேக்கிங் சோடா – 1/4 டீஸ்பூன்

* பெருங்காயத் தூள் – 1/4 டீஸ்பூன்

* தண்ணீர் – தேவையான அளவு

* பஜ்ஜி மிளகாய் – 6

* எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு

உள்ளே வைப்பதற்கு…

* வெங்காயம் – 1/2 கப் (பொடியாக நறுக்கியது)

* சீஸ் – 1 கப் (துருவியது)

* உப்பு – சுவைக்கேற்ப

* கொத்தமல்லி – 4 டேபிள் ஸ்பூன் (பொடியாக நறுக்கியது)

செய்முறை:

* முதலில் ஒரு பௌலில் துருவிய சீஸ், நறுக்கிய வெங்காயம், நறுக்கிய கொத்தமல்லி மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.

* பின் பஜ்ஜி மிளகாயை கீறி அதனுள் உள்ள விதைகளை நீக்கிவிட்டு, உள்ளே சீஸ் கலவையை வைக்க வேண்டும்.

* பின்பு ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி மாவு, இஞ்சி பூண்டு விழுது, மிளகாய் தூள், உப்பு, பேக்கிங் சோடா, பெருங்காயத் தூள் சேர்த்து, தேவையான அளவு நீரை ஊற்றி பஜ்ஜி மாவு பதத்திற்கு கலந்து கொள்ள வேண்டும்.

* பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும்.

* எண்ணெய் சூடானதும், சீஸ் வைத்த மிளகாயை பஜ்ஜி மாவில் பிரட்டி எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால், சுவையான மற்றும் மொறுமொறுப்பான சில்லி சீஸ் பஜ்ஜி தயார்.

இந்த பதிவின் மூலமாக சில்லி சீஸ் பஜ்ஜி எப்படி செய்வது என்பதை பற்றி தெரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நீங்களும் இதை பின்பற்றி சில்லி சீஸ் பஜ்ஜி ரெசிப்பி செய்து எப்படி இருந்தது என்று கமென்ட் செய்யுங்கள் அல்லது உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தாலும் கமென்ட் செய்யுங்கள் பதிலளிக்கிறோம். உங்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தால் உங்களுடைய நண்பர்களுக்கு பகிருங்கள். .

About the author

admin

Leave a Comment