நமது தளத்தில் பல்வேறு சமையல் செய்முறைகள் பற்றி பதிவிட்டு வருகிறோம் அதன் தொடர்ச்சியாக, இந்த பதிவில் சுவையான மாம்பழ சர்பெட் ரெசிப்பி செய்வது எப்படி என்று பார்க்கப் போகிறோம். இதனை முயற்சி செய்து உங்களின் பிரியாமானவர்களுக்கு அளித்து மகிழுங்கள்…
கொளுத்தும் வெயிலில் நன்கு ஜில்லென்று ஏதாவது சாப்பிட வேண்டுமென்று தோன்றும். ஆனால் வீட்டில் எப்போதும் ஐஸ் க்ரீம் ஸ்டாக் வைத்துக் கொள்ள முடியாது அல்லவா? இந்நிலையில் உங்கள் வீட்டில் மாம்பழங்கள் உள்ளதா? அப்படியானால் அதைக் கொண்டு ஒரு குளிர்ச்சியான மற்றும் ஐஸ் க்ரீம் போன்ற ஒரு ரெசிபியை வீட்டிலேயே எளிதில் செய்து சாப்பிடலாம். அது தான் மாம்பழ சர்பெட். இந்த மாம்பழ சர்பெட் செய்வது மிகவும் சுலபம். அதோடு இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும்.
தேவையான பொருட்கள்:
* நன்கு கனிந்த மாம்பழங்கள் – 3 கப் (தோலுரித்து துண்டுகளாக்கப்பட்டது)
* எலுமிச்சை சாறு – 1 டேபிள் ஸ்பூன்
* சர்க்கரை – 1/3 கப் அல்லது தேவையான அளவு
* புதினா இலைகள் – ஒரு கையளவு
செய்முறை:
* முதலில் மாம்பழங்களை துண்டுகளாக்கி ஜிப்லாக் பேக்கில் போட்டு, ஃப்ரீசரில் வைத்து நன்கு உறைய வைக்க வேண்டும்.
* மாம்பழத் துண்டுகள் நன்கு உறைந்ததும், அதை பிளெண்டரில் போட்டு, அத்துடன் எலுமிச்சை சாறு, புதினா, சர்க்கரை ஆகியவற்றை சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
* அப்படி அரைக்கும் போது, அது கெட்டியாகவும், க்ரீமியாக ஐஸ்க்ரீம் போன்று இருக்கும்.
* இப்போது அதை ஒரு பௌலில் எடுத்து வைத்து உடனே பரிமாறுங்கள் அல்லது அதை ஒரு கண்டெய்னரில் போட்டு ஃப்ரீசரில் 30 நிமிடம் வைத்து பின் அதை வெளியே எடுத்து 10 நிமிடங்கள் கழித்து பரிமாறுங்கள்.
குறிப்பு:
* மாம்பழங்களை நன்கு உறைய வைத்து செய்தால் தான் சர்பெட் நன்கு க்ரீமியாக இருக்கும்.
* மாம்பழ துண்டுகளை ஜிப்லாக் பேக்கில் போட்டு வைத்துக் கொண்டால், அதை 1 மாதம் வரை வைத்து பயன்படுத்தலாம்.
* சர்பெட்டை ஒரு வாரம் வரை வைத்து பயன்படுத்தலாம். ஆனால் பரிமாறுவதற்கு 10 நிமிடத்திற்கு முன்னரே வெளியே எடுத்து வைத்து விடுங்கள்.
* உங்கள் வீட்டில் ஏற்கனவே உறைய வைக்கப்பட்ட மாம்பழத் துண்டுகள் இருந்தால், இந்த சர்பெட்டை நிமிடத்தில் செய்து சாப்பிடலாம்.
இந்த பதிவின் மூலமாக மாம்பழ சர்பெட் எப்படி செய்வது என்பதை பற்றி தெரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நீங்களும் இதை பின்பற்றி மாம்பழ சர்பெட் ரெசிப்பி செய்து எப்படி இருந்தது என்று கமென்ட் செய்யுங்கள் அல்லது உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தாலும் கமென்ட் செய்யுங்கள் பதிலளிக்கிறோம். உங்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தால் உங்களுடைய நண்பர்களுக்கு பகிருங்கள். .