அசைவம்

Restaurant Style Chicken 65 Recipe In Tamil | ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சிக்கன் 65

நமது தளத்தில் பல்வேறு சமையல் செய்முறைகள் பற்றி பதிவிட்டு வருகிறோம் அதன் தொடர்ச்சியாக, இந்த பதிவில் சுவையான ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சிக்கன் 65 ரெசிப்பி செய்வது எப்படி என்று பார்க்கப் போகிறோம். இதனை முயற்சி செய்து உங்களின் பிரியாமானவர்களுக்கு அளித்து மகிழுங்கள்…

நமக்கு என்ன தான் சமையல் தெரிந்தாலும், மற்றவர்கள் சொல்லும் ரெசிபியை முயற்சித்துப் பார்த்து அதன் சுவையை அறிய விரும்புவோம். குறிப்பாக ஹோட்டல்களுக்கு சென்றால் அங்கு வாங்கி சாப்பிடும் ரெசிபிக்களை வீட்டில் செய்து பார்க்க நினைப்போம். குறிப்பாக சிக்கன், மட்டன் ரெசிபிக்களை வீட்டில் செய்ய ஆசைப்படுவோம். இதில் பலரும் ஆர்டர் செய்து சாப்பிடும் ஓர் ரெசிபி தான் சிக்கன் 65.

நம் அனைவருக்கும் சிக்கன் 65 செய்யத் தெரிந்தாலும், ஹோட்டலில் சாப்பிடும் சிக்கன் 65 மிகவும் மென்மையாகவும் சுவையாகவும் இருக்கும். அது எப்படி தெரியுமா? அதற்கு அவர்கள் சேர்க்கும் மசாலா தான் காரணம். இந்த வார விடுமுறையில் உங்கள் வீட்டிலேயே சுவையான சிக்கன் 65 செய்து சாப்பிட நினைத்தால், கீழே கொடுக்கப்பட்டுள்ள ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சிக்கன் 65 செய்து சாப்பிடுங்கள்.

தேவையான பொருட்கள்:

ஊற வைப்பதற்கு…

* எலும்பில்லாத சிக்கன் – 1/2 கிலோ

* இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டீஸ்பூன்

* மல்லித் தூள் – 2 டீஸ்பூன்

* மிளகாய் தூள் – 2 டீஸ்பூன்

* சீரகத் தூள் – 1/4 டீஸ்பூன்

* மஞ்சள் தூள் – 1 சிட்டிகை

* சோள மாவு – 2 டீஸ்பூன்

* அரிசி மாவு – 3/4 டீஸ்பூன்

* கேசரி பவுடர் – 1/4 டீஸ்பூன்

* எலுமிச்சை சாறு – 1 டேபிள் ஸ்பூன்

* முட்டை – 1

* உப்பு – சுவைக்கேற்ப

பிற பொருட்கள்:

* எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு

* கறிவேப்பிலை – சிறிது

செய்முறை:

* முதலில் சிக்கனை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும்.

* பின்னர் அதை ஒரு பாத்திரத்தில் போட்டு, அத்துடன் ஊற வைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து நன்கு கிளறிக் கொள்ள வேண்டும்.

* பின்பு அதை குறைந்தது 2 மணிநேரம் ஊற வைக்க வேண்டும். இதனால் சிக்கன் 65 நன்கு மென்மையாக இருக்கும்.

* பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும்.

* எண்ணெய் சூடானதும், அதில் கறிவேப்பிலை சேர்த்து பொரித்து தனியாக ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.

* அடுத்து சிக்கன் துண்டுகளைப் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்து, அதன் மேல் பொரித்த கறிவேப்பிலையைத் தூவினால், ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சிக்கன் 65 தயார்.

Image Courtesy: sharmispassions

இந்த பதிவின் மூலமாக ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சிக்கன் 65 எப்படி செய்வது என்பதை பற்றி தெரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நீங்களும் இதை பின்பற்றி ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சிக்கன் 65 ரெசிப்பி செய்து எப்படி இருந்தது என்று கமென்ட் செய்யுங்கள் அல்லது உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தாலும் கமென்ட் செய்யுங்கள் பதிலளிக்கிறோம். உங்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தால் உங்களுடைய நண்பர்களுக்கு பகிருங்கள். .

About the author

admin

Leave a Comment