நமது தளத்தில் பல்வேறு சமையல் செய்முறைகள் பற்றி பதிவிட்டு வருகிறோம் அதன் தொடர்ச்சியாக, இந்த பதிவில் சுவையான Karandi omelette : கரண்டி ஆம்லெட் ரெசிப்பி செய்வது எப்படி என்று பார்க்கப் போகிறோம். இதனை முயற்சி செய்து உங்களின் பிரியாமானவர்களுக்கு அளித்து மகிழுங்கள்…
தினமும் முட்டை சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது. ஏனெனில் முட்டையில் புரோட்டீன் மட்டுமின்றி, பிற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களும் உள்ளன. பலருக்கு முட்டையை வேக வைத்து சாப்பிட பிடிக்காது. அத்தகையவர்கள் முட்டையை ஆம்லெட் செய்து சாப்பிடுவார்கள். தோசைக்கல்லில் ஆம்லெட் போட்டால் அது சாதாரண முட்டை ஆம்லெட். அதுவே கரண்டியில் போட்டால் அது தான் கரண்டி ஆம்லெட். இந்த கரண்டி ஆம்லெட்டை மாலை வேளையில் ஸ்நாக்ஸாக செய்து சாப்பிடலாம்.
கரண்டி ஆம்லெட்டை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கரண்டி ஆம்லெட் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* முட்டை – 2
* பெரிய வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)
* கொத்தமல்லி – சிறிது (பொடியாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் – 2 (பொடியாக நறுக்கியது)
* மிளகாய் தூள் – 1/4 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் – சிறிது
* மிளகுத் தூள் – 1/4 டீஸ்பூன்
* உப்பு – சுவைக்கேற்ப
* எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
* முதலில் ஒரு பௌலில் முட்டையை உடைத்து ஊற்றி நன்கு அடித்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் அதில் வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி, மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு மற்றும் மிளகுத் தூள் சேர்த்து நன்கு அடித்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு தாளிக்கும் கரண்டியை அடுப்பில் வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி சூடானதும், முட்டை கலவையை கொஞ்சம் ஊற்றி பொன்னிறமாக வெந்ததும், அதை மறுபக்கம் திருப்பிப் போட்டு வேக வைத்து எடுக்க வேண்டும்.
* இதேப் போல் மீதமுள்ள முட்டை கலவையை கரண்டியில் ஊற்றி வேக வைத்து எடுத்தால், கரண்டி ஆம்லெட் தயார்.
Image Courtesy: steffisrecipes
இந்த பதிவின் மூலமாக Karandi omelette : கரண்டி ஆம்லெட் எப்படி செய்வது என்பதை பற்றி தெரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நீங்களும் இதை பின்பற்றி Karandi omelette : கரண்டி ஆம்லெட் ரெசிப்பி செய்து எப்படி இருந்தது என்று கமென்ட் செய்யுங்கள் அல்லது உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தாலும் கமென்ட் செய்யுங்கள் பதிலளிக்கிறோம். உங்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தால் உங்களுடைய நண்பர்களுக்கு பகிருங்கள். .