சைவம்

Pudina Thogayal Recipe in Tamil | புதினா துவையல்

நமது தளத்தில் பல்வேறு சமையல் செய்முறைகள் பற்றி பதிவிட்டு வருகிறோம் அதன் தொடர்ச்சியாக, இந்த பதிவில் சுவையான புதினா துவையல் ரெசிப்பி செய்வது எப்படி என்று பார்க்கப் போகிறோம். இதனை முயற்சி செய்து உங்களின் பிரியாமானவர்களுக்கு அளித்து மகிழுங்கள்…

புதினா உடலுக்கு மிகவும் நல்லது. அடிக்கடி புதினாவை உணவில் சேர்த்து வந்தால் உடல் குளிர்ச்சியாக இருக்கும். உங்கள் வீட்டில் புதினா உள்ளதா? இன்று இரவு இட்லி அல்லது தோசை செய்ய திட்டமிட்டுள்ளீர்களா? அப்படியானால் புதினாவைக் கொண்டு துவையல் செய்யுங்கள். இந்த புதினா துவையல் செய்வதற்கு ஈஸியாகவும், இட்லி, தோசையுடன் சேர்த்து சாப்பிட அற்புதமாகவும் இருக்கும். குறிப்பாக இந்த துவையல் குழந்தைகளும் விரும்பி சாப்பிடும் வகையில் சூப்பராக இருக்கும்.

தேவையான பொருட்கள்:

* புதினா – 2 கப்

* உப்பு – சுவைக்கேற்ப

* சர்க்கரை – 1 டீஸ்பூன்

வறுத்து அரைப்பதற்கு…

* துவரம் பருப்பு – 1 டேபிள் ஸ்பூன்

* உளுத்தம் பருப்பு – 1 டேபிள் ஸ்பூன்

* வரமிளகாய் – 2

* தேங்காய் – 1/2 கப்

* பூண்டு – 1 பல்

* புளி – 1 சிறிய துண்டு

செய்முறை:

* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் வறுத்து அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களில் புளியைத் தவிர மற்ற அனைத்து பொருட்களையும் சேர்த்து 3-4 முறை வறுக்க வேண்டும்.

* பின் அதில் புதினா இலைகளை சேர்த்து சுருங்கும் வரை வதக்க வேண்டும்.

* பிறகு அதில் புளியை சேர்த்து நன்கு கிளறி, உப்பு மற்றும் சர்க்கரை சேர்த்து நன்கு கிளறி இறக்கி குளிர வைக்க வேண்டும்.

* பின்பு அதை மிக்சர் ஜாரில் போட்டு, சிறிது நீரை தெளித்து கெட்டியாக அரைத்தால், புதினா துவையல் தயார்.

இந்த பதிவின் மூலமாக புதினா துவையல் எப்படி செய்வது என்பதை பற்றி தெரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நீங்களும் இதை பின்பற்றி புதினா துவையல் ரெசிப்பி செய்து எப்படி இருந்தது என்று கமென்ட் செய்யுங்கள் அல்லது உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தாலும் கமென்ட் செய்யுங்கள் பதிலளிக்கிறோம். உங்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தால் உங்களுடைய நண்பர்களுக்கு பகிருங்கள். .

About the author

admin

Leave a Comment