சைவம்

Mango Poori Recipe In Tamil | மாம்பழ பூரி

நமது தளத்தில் பல்வேறு சமையல் செய்முறைகள் பற்றி பதிவிட்டு வருகிறோம் அதன் தொடர்ச்சியாக, இந்த பதிவில் சுவையான மாம்பழ பூரி ரெசிப்பி செய்வது எப்படி என்று பார்க்கப் போகிறோம். இதனை முயற்சி செய்து உங்களின் பிரியாமானவர்களுக்கு அளித்து மகிழுங்கள்…

மாம்பழ சீசன் என்பதால் மாம்பழம் எங்கும் விலை குறைவில் கிடைப்பதைக் காணலாம். நீங்கள் மாம்பழ பிரியர் என்றால், மாம்பழத்தை பல வித்தியாசமான வழிகளில் சாப்பிட விரும்புகிறீர்கள் என்றால், மாம்பழ பூரி செய்து சாப்பிடுங்கள். இது நிச்சயம்

தேவையான பொருட்கள்:

* கோதுமை மாவு – 1 கப்

* மாம்பழ கூழ் – 1/4 கப்

* ஏலக்காய் பொடி – 1/4 டீஸ்பூன்

* உப்பு – சுவைக்கேற்ப

* தண்ணீர் – தேவையான அளவு

செய்முறை:

* முதலில் ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, மாம்பழ கூழ், ஏலக்காய் பொடி மற்றும் உப்பு ஆகியவற்றை சேர்த்துக் கொள்ள வேண்டும்.

* பின் விரல்களால் மெதுவாக கிளறி, கொஞ்சம் கொஞ்சமாக நீரை ஊற்றி பூரி மாவு பதத்திற்கு பிசைந்து, குறைந்தது 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.

* பின்பு பிசைந்த மாவை சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ள வேண்டும்.

* பிறகு ஒரு உருண்டையை எடுத்து பூரி அளவில் தேய்த்துக் கொள்ள வேண்டும். இதேப் போன்று அனைத்து உருண்டைகளையும் தேய்த்துக் கொள்ள வேண்டும்.

* அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும்.

* எண்ணெய் சூடானதும், தேய்த்ததை ஒவ்வொன்றாக போட்டு பொரித்து எடுத்தால், மாம்பழ பூரி தயார்.

குறிப்பு:

*
* மாம்பழ கூழ் சேர்ப்பதால் வழக்கத்தை விட வேகமாக பூரி வெந்துவிடும். எனவே சற்று கவனமாக இருங்கள்.

Image Courtesy: sharmispassions

இந்த பதிவின் மூலமாக மாம்பழ பூரி எப்படி செய்வது என்பதை பற்றி தெரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நீங்களும் இதை பின்பற்றி மாம்பழ பூரி ரெசிப்பி செய்து எப்படி இருந்தது என்று கமென்ட் செய்யுங்கள் அல்லது உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தாலும் கமென்ட் செய்யுங்கள் பதிலளிக்கிறோம். உங்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தால் உங்களுடைய நண்பர்களுக்கு பகிருங்கள். .

About the author

admin

Leave a Comment