சைவம்

Onion Tomato Gotsu Recipe In Tamil | தக்காளி வெங்காய கொஸ்து

நமது தளத்தில் பல்வேறு சமையல் செய்முறைகள் பற்றி பதிவிட்டு வருகிறோம் அதன் தொடர்ச்சியாக, இந்த பதிவில் சுவையான தக்காளி வெங்காய கொஸ்து ரெசிப்பி செய்வது எப்படி என்று பார்க்கப் போகிறோம். இதனை முயற்சி செய்து உங்களின் பிரியாமானவர்களுக்கு அளித்து மகிழுங்கள்…

இன்று இரவு உங்கள் வீட்டில் இட்லி அல்லது தோசை செய்யலாம் என்று நினைத்துள்ளீர்களா? அதற்கு ஒரு புளிப்பான மற்றும் சுவையான சைடு டிஷ் செய்ய வேண்டுமா? அப்படியானால் தக்காளி வெங்காய கொஸ்து செய்யுங்கள். இது செய்வது மிகவும் சுலபம் மற்றும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும்.

தேவையான பொருட்கள்:

* எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்

* கடுகு – 1 டீஸ்பூன்

* பெருங்காயத் தூள் – 1 சிட்டிகை

* கறிவேப்பிலை – சிறிது

* வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)

* தக்காளி – 3 (பொடியாக நறுக்கியது)

* பச்சை மிளகாய் – 2 (பொடியாக நறுக்கியது)

* மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்

* மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்

* மல்லித் தூள் – 1 டேபிள் ஸ்பூன்

* உப்பு – சுவைக்கேற்ப

* சர்க்கரை – 1 டீஸ்பூன்

* புளி – 1 சிறிய துண்டு (நீரில் ஊற வைத்து சாறு எடுத்துக் கொள்ளவும்)

* தண்ணீர் – தேவையான அளவு

செய்முறை:

* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, பெருங்காயத் தூள் சேர்த்து தாளிக்க வேண்டும்.

* பின்னர் அதில் வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து சிறிது உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து, வெங்காயத்தை நன்கு வதக்க வேண்டும்.

* பின்பு அதில் தக்காளியை சேர்த்து, மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.

* பிறகு அதில் மிளகாய் தூள், மல்லித் தூள் மற்றும் சுவைக்கேற்ப உப்பு மற்றும் சர்க்கரை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.

* அதன் பின் அதில் புளிச்சாற்றினை ஊற்றி, தேவையான அளவு நீரையும் ஊற்றி நன்கு 10 நிமிடம் மிதமான தீயில் வைத்து கொதிக்க விட்டு இறக்கினால், சுவையான தக்காளி வெங்காய கொஸ்து தயார்.

இந்த பதிவின் மூலமாக தக்காளி வெங்காய கொஸ்து எப்படி செய்வது என்பதை பற்றி தெரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நீங்களும் இதை பின்பற்றி தக்காளி வெங்காய கொஸ்து ரெசிப்பி செய்து எப்படி இருந்தது என்று கமென்ட் செய்யுங்கள் அல்லது உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தாலும் கமென்ட் செய்யுங்கள் பதிலளிக்கிறோம். உங்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தால் உங்களுடைய நண்பர்களுக்கு பகிருங்கள். .

About the author

admin

Leave a Comment