பட்டுக்கோட்டை செய்திகள்

பட்டுக்கோட்டை லாரல் பள்ளி மாணவர் யோகா போட்டியில் தங்கப்பதக்கம் வென்று சாதனை

Pattukkotai Laurel School

மாநில அளவிலான யோகா சாம்பியன்ஷிப் 2017 போட்டிகள் கோயம்புத்தூர்தம்பு மேல்நிலைப் பள்ளியில் நடந்தது. இப்போட்டியில் மாநிலம் முழுவதிலிருந்தும் சுமார் 1500 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

இதில் தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அடுத்த பள்ளி கொண்டான் லாரல் சிபிஎஸ்இ பள்ளி மாணவ, மாணவிகள் 7  பேர் கலந்து கொண்டனர். 6 வயது முதல் 27 வயதிற் குட்பட்டவர்களுக்கான ஒரே பொதுப் பிரிவில் இப்பள்ளி 9ம் வகுப்பு மாணவர் .ஹரிஹரஅழகப்பன் 142 புள்ளிகள் பெற்று மாநில அளவில் மூன்றாமிடம் பெற்று, தங்கப்பதக்கம் வென்று பள்ளிக்கு பெருமை சேர்த்தார்.

தங்கப்பதக்கம்

மேலும் இதே மாண வர் 14 வயதிற்குட்பட்டவர்களுக்கான சிறப்புப்பிரிவில் தங்கப்பதக்கம் வென்றார். அதே போல் 14 வயதிற்குட்பட்டவர்களுக்கான சிறப்புப்பிரிவில் இப்பள்ளி 7ம் வகுப்பு மாணவர்கள்  ஏ.அனிஸ் பாலதீர்த்தன், டி.சேஷாத்ராகுல், எல்.சுகேஷ், கே.ஸ்ரீரேயஸ், மாணவி எம்.ஸ்ரீவர்ஷா ஆகியோரும், 10 வயதிற்குட்பட்டவர்களுக் கானபிரிவில் 6ம் வகுப்பு மாணவி என்.பிரியஹர்சினியும் தங்கப்பதக்கம் வென்றனர்.

Laurel School சாம்பியன்ஷிப் பட்டம்

போட்டியில் ஒரே பள்ளியை சேர்ந்த 7 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு தங்கப்பதக்கம் வென்றதால் லாரல் சிபி எஸ்இ பள்ளிக்கு ஓவர் ஆல் சாம்பியன்ஷிப் பட்டத்திற்கான சீல்டு வழங்கப்பட்டது.

தேசிய அளவிலான போட்டிக்கு தேர்வு

கேரள மாநிலம், எர்ணாகுளம் சரஸ்வதி வித்யா கேந்த்ரா பப்ளிக் பள்ளியில் நடந்த தென் மண் டல அளவிலான ஜுடோ சாம்பியன்ஷிப் போட்டியில் ஆடவர் 17 வயதிற் குட்பட்டவர்களுக்கான பிரிவில் இப்பள்ளி 11ம் வகுப்பு மாணவர்கள். சந்தீப்செல்வம். ஹரிஹரன் ஆகியோர் கலந்து கொண் ட னர். இதில் மாணவர் சந்தீப்செல்வம் வெள்ளிப்பதக்கம் வென்று தேசிய அளவிலான போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டார்.

வெற்றி பெற்று பதக்கங் களை வென்ற பள்ளி மாணவர்களையும், யோகா ஆசிரியை தவஷீலாவையும் லாரல் கல்வி நிறுவனங்களின் டிரஸ்டி பாலசுப்ரமணியன், பள்ளியின் இயக்குநர்கள் பாலசஞ்சீவி, பாரத், எலிசபெத் தேவாசீர்வாதம், சிபி எஸ்இ பள்ளி மூத்த முதல்வர் சத்தியவதி, முதல்வர் மல்லிகா சைமன் ஆகியோர் பாராட்டினர்.

About the author

admin

Leave a Comment