செய்திகள்

ரூபாய் 500,100 நோட்டுகள் செல்லாது : நாம் தெரிந்துக் கொள்ள வேண்டியதும், செய்ய வேண்டியதும்…!

Indian currency: இன்று நள்ளிரவு(9.11.2016) முதல் ரூ500, ரூ1,000 நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் மோடி திடீரென அறிவித்துள்ளார். இந்த ரூபாய் நோட்டுகளை டிசம்பர் 30-க்குள் வங்கிகள், அஞ்சலகங்களில் மாற்றிக் கொள்ள்லாம்; தவிர்க்க் இயலாத காரணங்களால் மாற்ற முடியாதவர்கள் மார்ச் 31-ந் தேதி வரையும் மாற்றலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

1

நாளை வங்கிகள் விடுமுறை

வங்கிகள் மற்றும் தபால் நிலையங்களில் ரூ.500, ரூ.1000 நோட்டுக்களை வரும் 10 ம் தேதி முதல் மாற்றிக்கொள்ளவும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதன் காரணமாக, நாளை ஒரு நாள் நாடு முழுவதும் உள்ள வங்கிகள், ஏ.டி.எம். இயந்திரங்கள் மற்றும் தபால் நிலையங்கள் செயல்படாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் நாடு முழுவதும் பண பரிவர்த்தனைகள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

50 நாட்கள் அவகாசம்

ரூ.500, ரூ.1000 நோட்டுக்களை மாற்றிக்கொள்ள பொதுமக்களுக்கு 50 நாட்கள் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. ஒரு நபர் ரூ.5 ஆயிரம் வரை எந்த அடையாள அட்டையும் இன்றி பணம் மாற்றிக்கொள்ள முடியும் என்றும், ரூ.5 ஆயிரத்திற்கு மேல் வங்கியில் பணம் மாற்றினால், அடையாள அட்டைக் கட்டாயம் காண்பிக்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கியில் ஏற்றுக்கொள்ளப்படாத நோட்டுக்களை, ரிசர் வங்கியில் கொடுத்து மாற்றிக்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டள்ளது. மேலும், பணத்தை மாற்றுவதற்கு வங்கிகள் மற்றும் தபால் நிலையங்களில் சிறப்பு கவுண்ட்டர்கள் திறக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சில தவிர்க்க முடியாத காரணங்களால், பணத்தை மாற்ற முடியாதவர்கள், 2017 ஆண்டு மார்ச் 31 ம் தேதி வரை மாற்றிக்கொள்ளலாம் என்றும் கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

பணம் மாற்ற சிறப்பு சலுகை

சில தவிர்க்க முடியாத காரணங்களால், பணத்தை மாற்ற முடியாதவர்கள், 2017 ஆண்டு மார்ச் 31 ம் தேதி வரை மாற்றிக்கொள்ளலாம் என்றும் கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

புதிய நோட்டுக்கள் அறிமுகம்

மேலும், நாளை மறுநாள் முதல் புதிய வடிவில் 2000 ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் மற்றும் 500 ரூபாய் நோட்டுக்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாகவும் மோடி அறிவித்துள்ளார். இதன் மூலம் கள்ள நோட்டுக்கள் அச்சடிக்க முடியாது என்றும் கூறப்பட்டுள்ளது.

2

அரசு மருத்துவமனைகள், மருந்துக் கடைகள், பெட்ரோல் பங்க்குகள், இடுகாடுகள் ஆகிய இடங்களில் மட்டும் வரும் நவம்பர் 11ம் தேதி வரை ரூ.500, ரூ.1000 நோட்டுக்களை மாற்றிக்கொள்ளலாம் என்றும், 2005 க்கு முன்பு வரை அச்சிட்ட நோட்டுக்களை மட்டும் மாற்றிக்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. சர்வதேச விமான நிலையங்கள் மற்றும் ரயில் நிலையங்களில் ரூ.500, ரூ.1000 நோட்டுக்களை மாற்றிக்கொள்ள சிறப்பு வசதி செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

மோடி வருத்தம்

குடியரசுத் தலைவரை சந்தித்து, இது தொடர்பாக விளக்கம் அளிக்க உள்ளதாகவும் பிரதமர் மோடி கூறியுள்ளார். நாட்டில் கருப்பு பணத்தை ஒழிக்கும் விதமாக, ஊழலுக்கு எதிரான போராக இது கருதப்படுவதாகவும் பிரதமர் மோடி விளக்கம் அளித்துள்ளார். இதனால் மக்களுக்கு ஏற்படும் சிரமத்திற்கு வருந்துகிறேன் என்றும் பிரதமர் மோடி வருத்தம் தெரிவித்துள்ளார்.

ஏடிஎம்களில் குவியும் மக்கள்!

நள்ளிரவு முதல் ரூ.500, ரூ.1000 நோட்டுக்கள் செல்லாது என பிரதமர் மோடி திடீரென அறிவித்துள்ளார். ரூ.500, ரூ.1000 நோட்டுக்கள் வைத்திருப்பவர்கள் வங்கியில் ஒப்படைக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. முக்கியமாக, ரூ.500, ரூ.1000 நோட்டுக்களை வங்கியில் மாற்ற டிசம்பர் 30 ம் தேதி கடைசி நாள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.தவிர்க்க முடியாத காரணங்களால், மாற்ற இயலாதவர்கள் மார்ச் 31-ம் தேதி வரை அடையாள அட்டையைப் பயன்படுத்தி மாற்றிக் கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

atmmma1_21091

நாளை காலை முதல் 500,1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்பதால், ஏடிஎம்களில் மக்கள் படையெடுக்க துவங்கி இருக்கிறார்கள்.

ரிசர் வங்கி ஆளுநர் விளக்கம்

போதிய எண்ணிக்கையில் நோட்டுக்கள் தயாராக இருப்பதாக ரிசர் வங்கி ஆளுநர் உர்ஜித் பட்டேல் தெரிவித்துள்ளார். புதிய நோட்டுக்கள் அனைத்தும் 10 ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என்றும் அவர் கூறியுள்ளார்.

பொருளாதார விவகாரத்துறை செயலாளர் விளக்கம்

புதிய நோட்டுக்களை வங்கிகளுக்கு கொண்டு சேர்க்கவே நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாகப் பொருளாதார விவகாரத்துறை செயலாளர் சக்தி காந்த தாஸ் விளக்கம் அளித்துள்ளார். இதனால், நாளை ஒரு நாள் வங்கிகள் மற்றும் ஏ.டி.எம். இயந்திரங்கள் செயல்படாது என்றும் அவர் கூறியுள்ளார். நாளை மறுநாள் முதல் புதிய அம்சங்களுடன் புதிய 2 ஆயிரம் ரூபாய் மற்றும் 500 ரூபாய் நோட்டுக்கள் நடைமுறைக்கு வரும் என்றும் அவர் கூறினார்.

கள்ள நோட்டு, கருப்பு பணம் அதிகரித்ததால், இந்த துணிச்சலான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், நாட்டின் வளர்ச்சிக்கு இந்த நடவடிக்கை அவசியம் என்றும் அவர் தெரிவித்தார். குறுகிய கால அவகாசம் தந்தால்தான் கருப்பு பணத்தை மாற்ற முடியாது என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார். இந்த நடவடிக்கை தொடர்பாக ஏற்கனவே மாநில அரசுகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதாகவும், இந்த அறிவிப்பு பற்றி மத்திய அரசில் ஒரு சிலருக்கு மட்டுமே தெரியும் என்றும் அவர் கூறியுள்ளார்.

சந்தேகங்களை தீர்க்க புதிய நம்பர்

இந்நிலையில் பண பரிவர்த்தனை மற்றும் பொது மக்களின் சந்தேகங்களை தீர்க்க மக்கள் 011-23093230 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

About the author

admin

Leave a Comment