
1991 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 29 ஆம் தேதி கேரளாவில் உள்ள திரிசூரில் பிறந்தவர், தற்போது சென்னையில் வசித்துவருகிறார்.ஓவியா வீட்டுக்கு ஒரே பிள்ளை அம்மா, அப்பா, ஓவியா. ஒரு நடுத்தர குடும்பத்தில் பிறந்து செல்லமா வளர்க்கப்பட்ட ஓவியா அரசு பள்ளியில் தனது பள்ளி பருவத்தை முடித்த இவர் பின்பு, திரிசூர் விமலா கல்லூரியில் தனது பட்டபடிப்பினை (BA in Functional English in Vimala College) முடித்தார்.

இந்திய வடிவழகியும் நடிகையுமான இவர் தமிழில் களவானி (Kalavani 2010) படத்தின்மூலம் அறிமுகம் ஆனாலும் கங்காரு (Kangarro 2007) என்ற மலையாள படம் தான் ஓவியாவின் முதல் படம். வெற்றி படமான களவானியில் நடித்த ஓவியா பின்பு நல்ல கதைகளை தேர்வு செய்து, மெரினா, மூடர் கூடம், யாமிருக்கப் பயமேன் போன்ற படங்களில் நடித்தார். பின்பு கேன்சர் நோய் தாக்கிய தனது தாயின் மருத்துவ செலவுக்காக எந்த படமானாலும் எந்த கேரக்டர் ஆனாலும் நடித்து வந்த்தார். இருப்பினும் ஓவியாவின் தாய் கேன்சர் நோய் பாதிப்பால் இயற்கை எய்தினார்.
Helen Nelson ஹலென் நெல்சன்
ஓவியாவை பற்றி இயக்குநர் சற்குணம் கூறுகையில்… ”களவானி படத்துக்குப் புதுமுகங்களை தேடிக்கொண்டிருந்த நேரம். அப்போது எங்களிடம் ஓவியாவின் புகைப்படம் ஒன்று கிடைத்தது. பார்த்தவுடன் துறுதுறுவென இருந்த அந்தப் பெண்ணை எங்களுக்குப் பிடித்துவிட்டது. தயாரிப்பாளரும், ‘ இந்தப் படத்துக்கு இந்தப் பெண் பொருத்தமாக இருப்பார்’ என்றார். உடனே, அவரை சென்னைக்கு வரவழைத்து, மேக்கப் டெஸ்ட் எடுத்தோம். களவாணி படத்துக்கு அவர் செட் ஆனார்.
படப்பிடிப்பில் ஒருமுறை ஓவியாவைத் திட்டிவிட்டேன். உடனே, ஓர் இடத்தில் போய் சோகமாக அமர்ந்துகொண்டார். நான் அவர் பக்கத்தில் சென்று, ‘ திட்டியதை மறந்துவிட்டு, சிரித்துக்கொண்டே நடிக்க வேண்டும்’ என்றேன். உடனே, ஓகே சார் எனச் சிரித்துக் கொண்டே நடமாடினார். அந்தளவுக்கு எதையும் இயல்பாக எடுத்துக் கொள்ளக்கூடியவர்.
அவருடைய உண்மையான பெயர் ஹெலன். நான்தான் அவருக்கு ஓவியா எனப் பெயர் வைத்தேன். இந்தப் பெயர் ஓவியாவுக்குப் பிடிக்கவில்லை. எங்களிடம், ‘என் பெயரை தானியான்னு மாத்தப்போறேன்’ எனச் சொன்னார். நான்தான், ‘இந்தப் பெயர் நல்லா ரீச் ஆகும்’ எனச் சொன்னேன். இப்போது எல்லோரும் ஓவியா… ஓவியா எனப் பேசும்போது மிகுந்த சந்தோஷமாக உள்ளது.

பிக் பாஸ் நிகழ்ச்சியை நான் நான்கு முறை பார்த்தேன். என்னுடைய நண்பர்கள் நிகழ்ச்சியைப் பார்த்துவிட்டு, ‘ஓவியா கேரக்டரே இப்படித்தானா? இல்லை நிகழ்ச்சிக்காக இப்படி எல்லாம் நடிக்கிறாரா?’ எனக் கேட்டனர். ‘ஓவியா கேரக்டர் அப்படித்தான்’ எனப் பதில் கொடுத்தேன். அவர் எப்போதும் ஜாலியாக இருப்பார். அவருக்கு ஏற்ற கதை இருந்தால், என் படத்தில் அவரை மீண்டும் நடிக்க வைப்பேன்” என நெகிழ்ந்தார் இயக்குநர் சற்குணம்.
Oviya Filmography
ஆண்டு | படம் | கதாப்பாத்திரம் | மொழி | குறிப்பு |
---|---|---|---|---|
2007 | கங்காரு | மலையாளம் | ||
2008 | அபூர்வா | பூஜா | மலையாளம் | |
2010 | மன்மதன் அம்பு (திரைப்படம்) | சுனந்தா | தமிழ் | |
2011 | முத்துக்கு முத்தாக (திரைப்படம்) | சுவேதா | தமிழ் | |
கிருத்திகா | நேத்ரா | கன்னடம் | ||
2012 | மெரினா | சொப்னசுந்தரி | தமிழ் | |
2013 | சில்லுனு ஒரு சந்திப்பு | கீதா | தமிழ் | |
மூடர் கூடம் | கற்பகவள்ளி | தமிழ் | ||
மத யானைக் கூட்டம் | ரிது | தமிழ் | ||
2014 | அகராதி | தமிழ் | ||
யாமிருக்கப் பயமேன் | தமிழ் | |||
புலிவால் | தமிழ் | |||
2015 | சண்டமாருதம் | மின்மினி / ரேகா | தமிழ் | |
ஏஹ் இஷ்க் ஷ்ரபைர | ஹிந்தி | |||
144 | கல்யாணி | தமிழ் | ||
2016 | ஹலோ நான் பேய் பேசுறேன் | ஸ்ரீ தேவி | தமிழ் | |
2017 | சிலுக்குவாருப்பட்டி சிங்கம் | தமிழ் | படபிடிப்பில் | |
போகி | தமிழ் | படபிடிப்பில் | ||
இதி நா லவ் ஸ்டோரி | தெலுகு | படபிடிப்பில் | ||
Mr. மொம்மக | கன்னட | படபிடிப்பில் | ||
சீனி | தமிழ் | படபிடிப்பில் |