Mutton Keema Pulao Recipe: ஞாயிற்றுக்கிழமை வந்தாலே ஒரு குஷியா தான் இருக்கும். ஏனெனில் அப்போது தான் வாய்க்கு ருசியாக, நிம்மதியாக சாப்பிட முடியும். ஆகவே அவ்வாறு ருசியாக, காரசாரமாக, கொஞ்சம் பிரியாணி போன்று, மட்டன் கொத்துக்கறியை வைத்து செய்து சாப்பிடலாம். இப்போது அந்த மட்டன் கீமா புலாவ் ரெசிபியை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!
தேவையான பொருட்கள்
பாசுமதி அரிசி – 2 கப்
கொத்துகறி – 300 கிராம்
தயிர் – 2 கப்
வெங்காயம் – 1
இஞ்சி, பூண்டு விழுது – 1 டேபிள் ஸ்பூன்
லவங்கம் – 6
ஏலக்காய் – 8
மிளகு – 1/2 ஸ்பூன்
பாதாம் – 1/4 கப்
பிஸ்தா – 1/4 கப்
காய்ந்த திராட்சை – 1/2 கப்
குங்குமப்பூ – 1/2 ஸ்பூன்
நெய் – 5 டேபிள் ஸ்பூன்
உப்பு – தேவைகேற்ப
செய்முறை
ஒரு பாத்திரத்தில் 5 டேபிள் ஸ்பூன் நெய் விடவும். நறுக்கிய வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வதக்கவும். இதனுடன் மிளகு, ஏலக்காய், லவங்கம், தயிர், இஞ்சி பூண்டு விழுது, பாதாம், பிஸ்தா, காய்ந்த திராட்சை, குங்குமப்பூ சேர்த்து சுத்தம் செய்த கொத்துக்கறியை சேர்த்து வதக்கவும். போதுமான உப்பு சேர்க்கவும். தேவையான தண்ணீர் ஊற்றி குக்கரில் கறியை வேக விடவும். பிரஷர் போனதும் திறந்து பாசுமதி அரிசியை சேர்த்து 4 கப் தண்ணீர் ஊற்றி குக்கரை மூடவும்.
மட்டனும் அரிசியும் வெந்ததும் மூடியை திறந்து ஒரு கிளறு கிளறி மட்டன் கீமா புலாவை பரிமாறவும். இதே முறைப்படி கொத்துக்கறிக்கு பதிலாக மட்டன் அல்லது சிக்கன் சேர்த்தும் மட்டன் புலாவ், சிக்கன் புலாவ் செய்யலாம்.